×

செம்பனார்கோவிலில் 30 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு

தரங்கம்பாடி, ஜன.7: செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 30 ஒன்றியகுழு உறுப்பினர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். நாகை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியத்தில் 30 ஒன்றியகுழு வார்டுகள் உள்ளன. அதற்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய கடந்த 27ம் தேதி தேர்தல் நடந்தது. அதன் பிறகு கடந்த 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 18 திமுக உறுப்பினா;கள் வெற்றி பெற்றதன் மூலம் செம்பனார்கோவில் ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது.  மேலும் அதிமுக 8 பேரும், அமமுக 2 பேரும், தேமுதிக ஒருவரும் மற்றொரு சுயேட்சையும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடந்தது.
தேர்தல் அலுவலர் ஜெகமோகன் 30 உறுப்பினர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். செம்பனார்கோவிலில் ஒன்றிய ஆணையர் அருண், வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தேர்தல் அலுவலர் உறுதிமொழியை படிக்க அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று உறுதிமொழி அளித்து பதவியேற்று கையெழுத்திட்டனர். நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன், செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், அமமுக ஒன்றிய செயலாளர் ஜனார்தனன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். இதேபோல் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 57 ஊராட்சிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் பொறுப் பேற்றுக் கொண்டனர்.

Tags : 30 Union Committee Members ,Chembanarkovil ,
× RELATED செம்பனார்கோவிலில் தேசிய வாக்காளர் தின பேரணி