×

தேர்தலில் வென்ற மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்பு 11ம் தேதி மறைமுக தேர்தல்

நாகை, ஜன.7: நாகை மாவட்டத்தில் நாகை, திருமருகல், கீழ்வேளூர், சீர்காழி, செம்பனார்கோயில், கொள்ளிடம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் 242 ஊராட்சி தலைவர்கள், 1884 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 116 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 11 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடந்தது. அதேபோல் தலைஞாயிறு, கீழையூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் 192 ஊராட்சி தலைவர்கள், 1542 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 98 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 10 மாவட்ட ஊராட்சி வார்டுகள் என்று 11 ஊராட்சி ஒன்றிகளில் 4095 பதவிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நேற்று பதவியேற்று கொண்டனர். நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்வு செய்யப்பட்ட 14 வார்டு உறுப்பினர்கள் நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதவி ஏற்றனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வெற்றிச்செல்வன், பழனிகுமார் ஆகியோர் முன்னிலையில் பிரதிநிதிகள் உறுதிமொழிகளை வாசித்து பதவிபிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

அதேபோல் நாகை மாவட்ட ஊரராட்சி உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட 21 பேர் கலெக்டர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சண்முகநாதன், பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழிகளை வாசித்து பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். நாகை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி 1, துணைத் தலைவர் 1, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் 11, துணைத் தலைவர்கள் 11, கிராம ஊராட்சி துணைத் தலைவர்கள் 434 ஆக மொத்தம் 458 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பதவிகளுக்கு பதவிகளுக்கு வரும் 11ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

Tags : election ,representatives ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...