×

விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு மாணவர்களுக்கு 3ம் பருவ பாட புத்தகங்கள் வழங்கல்

கரூர், ஜன. 7: கரூர் மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 3ம்பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. கரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் நிறைவுபெற்றதையடுத்து விடுமுறை விடப்பட்டிருந்தது. உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களாக சில பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டிருந்ததால் பள்ளி திறக்கும் நாள் நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன்படி நேற்று (திங்கள்) பள்ளிகள் திறக்கப்பட்டன. கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்பட 128 பள்ளிகளுக்கு 6 முதல் 8ம் வகுப்பு வரை மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவ, மாணவியருக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. முழு ஆண்டுத்தேர்வுக்கு மாணவ மாணவியரை தயார்படுத்த பாடங்கள் துரிதமாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : holidays ,schools ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...