×

திசையன்விளையில் தீயணைப்பு நிலையம்

திசையன்விளை, ஜன. 7:  திசையன்விளையில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தீயணைப்பு நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். திசையன்விளையில் தீயணைப்பு நிலையம், வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த நிலையில், சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையாக இருந்தது. இதையேற்று இன்பதுரை எம்எல்ஏ முயற்சியால் புதிய கட்டிடம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திசையன்விளையில் நடந்த நிகழ்ச்சியில், புதிய கட்டிடத்தை நெல்லை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் மகாலிங்கம் மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நகர செயலாளர் சுடலைமணி, அரசு வழக்கறிஞர் பழனிசங்கர், நகர ஜெ. பேரவை செயலாளர் ஜெயக்குமார், கூட்டுறவு சங்க தலைவர் பாலன், முன்னாள் தலைவர் ஜெயபால், பால்ராஜ், அருள்ராஜ், அல்அமீன், சுந்தரம், தியாகஅரசு, ரஞ்சித்சிங், மணலிராஜா, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Fire Station ,
× RELATED கரூர் தீயணைப்பு நிலையத்தில்...