×

தங்கப்பழம் பாலிடெக்னிக்கில் கேம்பஸ் இன்டர்வியூ

புளியங்குடி, ஜன. 7: வாசுதேவநல்லூர், எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில், 3ம் ஆண்டு பயிலும் 650 மாணவர்களுக்கு பல முன்னணி நிறுவனங்களில் இருந்து கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் நேற்று சென்னை பட்டர்பிளே ஹோம் அப்ளையன்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது. இந்நிறுவன மனிதவளத்துறை அலுவலர் சீதாராமன், 125 மாணவர்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தினார். இதில் 92 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம் மற்றும் தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். கல்லூரி முதல்வர் காந்திராமன் முன்னிலை வகித்தார். வளாகத் தேர்வு ஏற்பாடுகளை பெட்ரோ கெமிக்கல் துறை தலைவர் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் முருகன் மற்றும் சங்கர்கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED அம்பை அருகே பெண்ணிடம் நகை பறித்த இருவர் கைது