×

தொரப்பள்ளி ஊராட்சி தலைவர் பதவி ஏற்ப்பு

ஓசூர், ஜன.7:  ஓசூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொரப்பள்ளிஅக்ரகாரம் ஊராட்சி தலைவர் பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. ஓசூர் ஒன்றியத்திற்குட்பட்ட தொரப்பள்ளி அக்ரகாரம் ஊராட்சி அலுவலகத்தில் நேற்று தொரப்பள்ளிஅக்ரகாரம் பஞ்சாயத்து தலைவராக சாந்தம்மா நஞ்சப்பா பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு உதவி தேர்தல் அலுவலர் சரவணகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது நல்லூர் பஞ்சாயத்திற்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவர் கூறுகையில், ‘தொரப்பள்ளிஅக்ரகாரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கழிவு நீர் கால்வாய், சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு செய்யப்படும். அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் எப்போதும் தொடர்பு கொள்ளலாம்,’ என்றார். இந்நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thorapalli Panchayat Chairman ,
× RELATED இளம்பெண் மாயம் தொழிலாளி மீது புகார்