×

பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு

விழுப்புரம், ஜன. 7:  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நேற்று அதிகாலை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. வைணவ திருத்தலங்களில் மார்கழி மாதத்தில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் முடிந்து, ராப்பத்து உற்சவம் தொடங்கும் நாளில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். அதன்படி நேற்று அதிகாலை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நடைபெற்று வந்தது. பகல் பத்து உற்சவம் நேற்றுமுன்தினம் நிறைவடைந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, பக்தர்களுக்கு வழங்க லட்டு பிரசாதம் தயார் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் விண்ணைப்பிளந்தது. இதேபோல் பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில், கோலியனூர் வரதராஜப்பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. வளவனூர் மேற்கு அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பிரம்மகுமாரிகள் ராஜயோக தியானநிலையத்தில் அமைந்துள்ள கலியவரதராஜ பெருமாள்கோயிலில் சொர்க்கவாசல்திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பிரம்மகுமாரர் செல்வமுத்துக்குமரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதே போல் வண்டிமேடு ராகவேந்திரர் கோயிலில் மகாவிஷ்ணு தேவி, பூதேவியுடன் தங்கக்கவசம் அணிந்து பக்தர்களுக்கு பெருமாள் காட்சியளித்தார்.

 திண்டிவனம்: திண்டிவனத்தில் பிரசித்தி பெற்ற கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விடியற்காலை திறக்கப்பட்ட சொர்க்கவாசலை காண ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். அலங்கரிக்கப்பட்ட லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு வழிபட்டனர். அறங்காவலர் குழு செயல் அலுவலர் கன்யா, ஆய்வாளர் சரவணன், எழுத்தர் சங்கர், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சந்தியா, குருக்கள் தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த திண்டிவனம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து உற்சவம் கடந்த 27ம் தேதி துவங்கியது. இதனை தொடர்ந்து ராப்பத்து துவக்கமாக நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தேகளீச பெருமாள் மோகன அலங்காரத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரத்தில் வலம் வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. இதனையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பெருமாள் முத்தங்கி சேவையில் விஷ்வரூப தரிசனத்தில் காட்சியளித்தார்.

 தேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு உடையவர் சன்னதிக்கு வந்தடைந்தார். பின்னர் பரமபத வாசலுக்கு சிறப்பு பூஜைகளுடன் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பரமபத மண்டபத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து நம்மாழ்வார் திருவாய்மொழி, ராப்பத்து உற்சவம் தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகளை ஜீயர் னிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் செய்திருந்தனர். கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன், திருக்கோவிலூர் டிஎஸ்பி மகேஷ், ஆய்வாளர் ரத்தினசபாபதி தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். செஞ்சி: செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. தாயர் ரங்கநாயகி தேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு விஷேச திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் அரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நம்மாழ்வார் முதலில் வருகை தந்தார். இதையடுத்து விடியற்காலை 5.40 மணிக்கு மேள தாளம் முழங்க கோயிலின் வடக்கு பகுதியில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக ரங்கநாதர் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து மலையை சுற்றி சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. விடியற்காலையில் இருந்து மாலை வரை செஞ்சியை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து ரங்கநாதரை வழிபட்டனர்

 இதில் விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ராமு மற்றும் விழா குழுவினர் ஏழுமலை, குணசேகரன், இளம்கீர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், ரங்கராஜ், கேசவன், பாலாஜி, சுரேஷ், ஆய்வாளர் அன்பழகன், மேனேஜர் மணி உள்ளிட்ட உபயதாரர்கள் செய்திருந்தனர். செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களுக்கு லட்டு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் செஞ்சி பீரங்கி மேடு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு மூலவர் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு திருமஞ்சனமும், துளசி மாலை, மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்தனர். இதையடுத்து அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நெய்விளக்கு ஏற்றி வழிபாடு

 உளுந்தூர்பேட்டை  மற்றும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் நேற்று வைகுண்ட  ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  உளுந்தூர்பேட்டையில் உள்ள கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோயிலில்  அதிகாலையில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து அதிகாலை 5 மணியளவில் சொர்க்கவாசல்

Tags : Paradise Gate ,Perumal Temples ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10...