×

தேனியில் சொர்க்கவாசல் திறப்பு

தேனி, ஜன. 7: தேனியில் அனைத்து கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாக நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை பத்திரகாளியம்மன் கோயிலில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேனியில் நேற்று காலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேனி ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், கணேச கந்த பெருமாள் கோயில், பெத்தாட்ஷி விநாயகர் கோயில், மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை பத்திரகாளியம்மன் கோயில், விருதுநகர் இந்து நாடார் பேட்டை பெருமாள் கோயில்களில் அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பத்திரகாளியம்மன் கோயிலில், காளியம்மன், மாரியம்மன், வெற்றி விநாயகர் ஆகியோர் வெள்ளிகவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தொடர்ந்து காலை 5 மணி  முதல் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேனி மற்றும் சுற்றுக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

பெரியகுளம்

பெரியகுளம் தென்கரையில் உள்ள வரதராஜபெருமாள் கோயிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெருமாளுக்கு சந்தனம், தேன், பால், தயிர், திருமஞ்சனம் போன்ற 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலை 5.30 மணிக்கு திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags : opening ,heaven ,
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு