×

தேனியில் மக்கள் குறைதீர் கூட்டம்

தேனி, ஜன. 7: உள்ளாட்சித் தேர்தலுக்கான நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதையடுத்து, தேனி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதனையடுத்து, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை கடந்த 2ம்தேதி தொடங்கி 3ம் தேதி வரை நடந்ததையடுத்து, கடந்த 4ம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பல்லவிபல்தேவ் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.

இதில் பல்வேறு துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களிடமிருந்து 179 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய துறை அதிகாரிகள் 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் பல்லவிபல்தேவ் பரிந்துரைத்தார். இக்கூட்டத்தின்போது, பல்வேறு துறைகளின் சார்பில் 57 பேருக்கு ரூ. 4 லட்சத்து 65 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பல்லவிபல்தேவ் வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகாயினி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : gathering ,Theni ,
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...