×

மதுரை மேற்கு ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர்கள் கவுன்சிலர்கள் பதவியேற்பு

வாடிப்பட்டி, ஜன.7: வாடிப்பட்டி மற்றும் மதுரை மேற்கு ஒன்றியத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். வாடிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு மாவட்ட கவுன்சில், 14ஒன்றிய கவுன்சில், 23கிராம ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் 153 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்கள் நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர். அதன்படி ஒன்றிய கவுன்சிலர்களாக திமுக.வினை சேர்ந்த கவுன்சிலர்களாக குருவித்துறை பசும்பொன்மாறன், இரும்பாடி தியாக முத்துப்பாண்டி, ஆண்டிபட்டி தனலெட்சுமி கண்ணன்,மன்னாடிமங்கலம் ரேகா கணேசன், சித்தாலங்குடி தனபாலன், மேலக்கால் சுப்பிரமணி, சுயேட்சை கவுன்சிலராக முள்ளிப்பள்ளம் கார்த்திகா ஞானசேகர் மற்றும் அதிமுக.வினை சேர்ந்த கவுன்சிலர்களாக மகாலெட்சுமி ராஜேஸ்கண்ணா, கச்சைகட்டி பவித்ரா, நாச்சிகுளம் ம.தங்கப்பாண்டி, கருப்பட்டி தங்கப்பாண்டி, காடுபட்டி சிவக்குமார், திருவேடகம் வசந்தகோகிலா சரவணன், தென்கரை பஞ்சவர்ணம் உள்ளிட்ட 14 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணையாளர் ராஜா அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஊராட்சி மன்ற தலைவர்களில் பூச்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக சாந்தி சீனிவாசன், இரும்பாடி ஊராட்சி மன்ற தலைவராக ஈஸ்வரி பண்ணைச்செல்வம், குட்லாடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக ஜோதி மீனா, கச்சைகட்டி ஊராட்சி மன்ற தலைவராக ஆலயமணி, ராமையன்பட்டி ஊராட்சிமன்ற தலைவராக குருமூர்த்தி, செமினிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தெய்வ தர்மர், விராலிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக காளியம்மாள். ஆண்டிபட்டி ஊராட்சிமன்ற தலைவராக மீனாள், சி.புதூர் ஊராட்சி மன்ற தலைவராக பாண்டுரெங்கன், கட்டக்குளம் ஊராட்சி மன்ற தலைவராக குணசுந்தரி உள்ளிட்டோர் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் தலைவர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களை தொடர்ந்து ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர். மதுரை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பொதும்பு ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்ற சாந்தி தனசேகர் அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். அவருடன்  அந்த ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர். அதேபோல் சமயநல்லூர் ஊராட்சி தலைவராக மலையாளம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

Tags : leaders ,Madurai ,Western Union ,
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...