×

ஆங்கிலத்தில் மாணவர்கள் அசத்த ஆசிரியருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி

குஜிலியம்பாறை, ஜன. 7:மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயற்சி வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. நாடு முழுவதும் ஆங்கில வழி கல்வி மோகம் அதிகரித்து வரும் நிலையில், ஆங்கில வழி வகுப்புகளை அதிகரிக்கவும் ஆங்கில பயிற்சிகளை வழங்கவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன்படி, அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவங்கப்பட்டன. ஆங்கில வழி வகுப்புகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதைத் தொடர்ந்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆங்கில திறன் வளர்ப்பு வகுப்புகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. மாவட்ட வாரியாக முதன்மை கல்வி அதிகாரிகள் இந்த வகுப்புகளை திட்டமிட்டு ஆசிரியர்களை பெருமளவில் பங்கேற்க செய்யுமாறு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags :
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு