×

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் பதவி ஏற்றனர்

உடுமலை,ஜன.7: உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நேற்று பதவி ஏற்றனர். தமிழகத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் மூலம் புதிய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களிலும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒன்றிய அலுவலகங்களில் நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு ஆணையர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மண்டல துணை வட்டார அலுவலர்கள் பதவிப்பிரமாணம் செய்துவைத்தனர். பின்னர் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ஊராட்சி தலைவர்கள் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். மாவட்ட கவுன்சிலர்கள் திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் பதவி ஏற்றனர். தேவனூர்புதூர் ஊராட்சி மன்ற தலைவராக செழியன், ஜல்லிப்பட்டியில் சாமிநாதன், எலையமுத்தூரில் மாரிமுத்து, கணக்கம்பாளையத்தில் காமாட்சி அய்யாவு, தாந்தோணியில் சுகந்திசெல்லப்பன், மெட்ராத்தியில் தங்கராஜ் ஆகியோர் பதவி ஏற்றனர். தேவனூர்புதூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களாக கவிதாமணி, ரங்கநாதன், அமராவதி நகர் ஒன்றிய கவுன்சிலராக லாசர் சுவாமிநாதன், உடுக்கம்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினராக புவனேஸ்வரி சிவசங்கரன் உள்ளிட்டோர் பதவி ஏற்றனர்.
உடுமலை ஒன்றியத்தை திமுக கைப்பற்றி உள்ளதால், திமுகவினர் உற்சாகமாக பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பெரியகோட்டை ஊராட்சி மன்ற தலைவராக பேச்சியம்மாள் பாலசுப்ரமணியம் நேற்று பதவியேற்று கொண்டார். பெரிய கோட்டை வார்டு உறுப்பினர்களாக சாதிக்பாட்சா, கணேசன், மகாலட்சுமி, பாக்கியலட்சுமி, வேலுமணி, குருலட்சுமி, ராமசந்திரன், லிங்கசாமி, விஸ்வநாதன், உமாமகேஸ்வரி, மயிலாத்தாள், வரதராஜன், சுபாஷினி, சக்திவேல் ஆகியோர் நேற்று பதவியேற்று கொண்டனர். ஒன்றிய கவுன்சிலராக பா.ஜ.க நாகமாணிக்கம் பதவியேற்று கொண்டார். ஒன்றிய செயலாளர் பெரிய கோட்டை முருகேசன், அவைத்தலைவர் செல்வராஜ், முன்னாள் துணைத்தலைவர் சுப்ரமணியம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தாராபுரம்: தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களான பழனிச்சாமி,சசிகுமார், கீதாலட்சுமி,கலைச்செல்வி,செல்வி, வேதநாயகி,சுகப்பிரியா,எஸ்.வி. செந்தில்குமார், தெய்வசிகாமணி, துர்கேஸ்வரி, சிலம்பரசன்,வீர சுந்தரிபழனிச்சாமி ஆகிய 12 பேர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் கணேஷ் மாலா, உதவி செயற்பொறியாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலையில், உடுமலை உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் ஜெயந்தி புதிய கவுன்சிலர்களுக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார். சேவூர் ஊராட்சி தலைவராக வேலுசாமி பதவிஏற்பு சேவூர் ஊராட்சி  தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற அவினாசி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சேவூர்  ஜி.வேலுசாமி, மற்றும் 1 முதல் 12 வார்டு உறுப்பினர்கள் நேற்று சேவூர் ஊராட்சி மன்ற  அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்  செந்தில்குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை  செயலாளர் ஜெகதீசன், ஒன்றிய அவைத்தலைவர் என்.சின்னக்கண்ணு, ஒன்றிய விவசாய அணி துணை  தலைவர் பி.தங்கவேல், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் சி.பழனிச்சாமி, கூட்டணி  கட்சி பொறுப்பாளர்கள், எஸ்.கே.டி.தேவராஜ், சி.ரவி, கணபதிசாமி, முன்னாள் ஊராட்சி  மன்ற தலைவர்கள் முகமது கவுஸ், கலாவதி பழனிச்சாமி, பாக்கியலட்சுமி ரவி, மற்றும்  ஐஸ்கடை நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டுடனர்.

Tags : Representatives ,elections ,
× RELATED அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம்