×

தலைவர், வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு

பொள்ளாச்சி, ஜன. 7:பொள்ளாச்சியில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகள் நேற்று பதவியேற்று கொண்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியங்களில், ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடந்தது. இதில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 39 ஊராட்சி தலைவர் பதவிக்கு 126 பேரும், 303 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 668 பேரும், 17 ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு 55 பேரும், 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 8 பேரும் என மொத்தம் 858 பேர் போட்டியிட்டனர். தெற்கு ஒன்றியத்தில் 26 ஊராட்சி தலைவர் பதவிக்கு 71 பேரும், 210 வார்டு உறுப்பினர் பதவிக்கு 487 பேரும், 13 ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு 41 பேரும், 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 4 பேரும் போட்டியிட்டனர். ஆனைமலை ஒன்றியத்தில் 19 ஊராட்சி தலைவர் பதவிக்கு 50 பேரும், 156 வார்டு உறுப்பினர் பதவிக்கு 405 பேரும், 14 ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு 40 பேரும், 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 7 பேரும் போட்டியிட்டனர். இதேபோல், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 34 ஊராட்சி தலைவர் பதவிக்கு 119 பேரும், 261 வார்டு உறுப்பினர் பதவிக்கு 641 பேரும், 17 ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு 65 பேரும், ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 3 பேரும் போட்டியிட்டனர். இந்த நான்கு ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பதவிகளுக்கும் மொத்தம் 2657 பேர் களமிறங்கினர். இதில், கோலார்பட்டி ஊராட்சி தலைவராக ஆறுச்சாமியும், எஸ்.பொன்னாபுரம் ஊராட்சி தலைவராக திலகவதியும். வடக்கு ஒன்றியத்தில் ஜமீன்முத்தூர் ஊராட்சி தலைவராக தவமணியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் குளத்துப்பாளையம் ஊராட்சியில் கன்னிகா பரமேஷ்வரியும், கக்கடவு ஊராட்சியில் பாலசுப்பிரமணியமும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், 159வார்டு உறுப்பினர் என மொத்தம் 164 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந் நிலையில்,  உள்ளாட்சி தேர்தலுக்கான  வாக்கு எண்ணிக்கை கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இதில், பல்வேறு அரசியல் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் சுயேட்சைகள் வெற்றிபெற்றனர். அவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றிபெற்ற அனைவரும் நேற்று பதவியேற்று கொண்டனர். இதில், ஒன்றிய கவுன்சிலராக தேர்வானவர்களுக்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர்களும். ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களாக தேர்வானவர்கள், அந்தந்த ஊராட்சியில்  துணை தேர்தல் நடத்தும் அலுவலர்ககளும் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். பல்வேறு ஊராட்சிகளில், மேடை அமைத்து மேள தாளம் முழங்க பதவியேற்பு விழா நடந்தது. வரும் 11ம் தேதி ஒன்றியத்தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : ward members ,
× RELATED டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி...