×

குறைதீர்க்கும் கூட்டத்தில் குறைந்த அளவு மனுக்கள்

ஈரோடு, ஜன. 7:  உள்ளாட்சி தேர்தலையொட்டி ஒத்திவைக்கப்பட்டிருந்த குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்த நிலையில் குறைந்த அளவு மனுக்கள் மட்டுமே வந்திருந்தன. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் குறைதீர் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து நேற்று வழக்கம்போல ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். பட்டா, வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, தெருவிளக்கு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 168 மனுக்கள் பெறப்பட்டன. வழக்கமாக 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்படும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை தளர்த்தப்பட்ட விபரம் பொதுமக்களுக்கு தெரியாததால், குறைதீர் கூட்டத்திற்கு பொதுமக்கள் மிக குறைந்த அளவே வந்திருந்தனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : grievance meeting ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டம் ஜூன் 8 வரை ரத்து