×

கடந்த ஓராண்டில் உழவர் சந்தைகளில் ரூ.64.60 கோடிக்கு காய்கறி விற்பனை

ஈரோடு, ஜன. 7:   ஈரோடு மாவட்டத்தில் உள்ள உழவர்சந்தைகளில் கடந்த ஓராண்டில் ரூ.64.60 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் 46 லட்சம் நுகர்வோர்கள் பயனடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் ஆகிய 5 இடங்களில் உழவர்சந்தைகள் செயல்படுகிறது. வெளி மார்க்கெட்டை விட உழவர்சந்தைகளில் காய்கறிகள் விலை குறைவு என்பதால், பொதுமக்கள் அதிக அளவில் உழவர்சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.  விவசாயிகளுக்கும் உரிய விலை கிடைப்பதால், இங்கு விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனை செய்கின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் உழவர்சந்தைகளில் காய்கறி விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் ஈரோடு சம்பத் நகர் உழவர்சந்தையில் 9 ஆயிரத்து 72 மெட்ரிக்டன் காய்கறிகள் ரூ.28 கோடியே 2 லட்சத்து 33 ஆயிரத்துக்கு விற்பனையானது. இதில் 47 ஆயிரத்து 513 விவசாயிகளும், 20 லட்சத்து 28 ஆயிரத்து 833 நுகர்வோர்களும் பயனடைந்துள்ளனர்.  ஈரோடு பெரியார் நகர் உழவர்சந்தையில் 4 ஆயிரத்து 904 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.11 கோடியே 72 லட்சத்து 44 ஆயிரத்துக்கு விற்பனையானது.

இதில் 20 ஆயிரத்து 812 விவசாயிகளும், 10 லட்சத்து 64 ஆயிரத்து 83 நுகர்வோர்களும் பயனடைந்துள்ளனர். பெருந்துறை உழவர்சந்தையில் ஆயிரத்து 789 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.4 கோடியே 91 லட்சத்து 52  ஆயிரத்துக்கு விற்பனையானது. இதில் 5 ஆயிரத்து 491 விவசாயிகளும், 4 லட்சத்து 5 ஆயிரத்து 686 நுகர்வோர்களும் பயன் பெற்றுள்ளனர். கோபிச்செட்டிபாளையம் உழவர்சந்தையில் 3 ஆயிரத்து 669 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.9 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்துக்கு விற்பனையானது. இதில் 15 ஆயிரத்து 858 விவசாயிகளும், 6 லட்சத்து 11 ஆயிரத்து 434 நுகர்வோர்களும் பயன் பெற்றுள்ளனர். சத்தியமங்கலம் உழவர்சந்தையில் 3 ஆயிரத்து 240 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.9 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்துக்கு விற்பனையானது.
இதில் 15 ஆயிரத்து 167 விவசாயிகளும், 5 லட்சத்து 40 ஆயிரத்து 516 நுகர்வோர்களும் பயன் பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 உழவர்சந்தைகளில் கடந்த ஓராண்டில் மட்டும் 22 ஆயிரத்து 674  மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.64 கோடியே 60 லட்சத்து 37 ஆயிரத்துக்கு விற்பனையாகியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ரூ.55 கோடியே 59 லட்சத்து 66 ஆயிரத்து 455க்கு விற்பனையானது. ஆனால் 2019ம் ஆண்டு ரூ.9 கோடி அளவிற்கு காய்கறிகள் விற்பனை உயர்ந்துள்ளது.

Tags :
× RELATED ஈரோடு பஸ் ஸ்டாண்டிற்குள் போக்குவரத்து மாற்றம்