×

தாம்பரம் பகுதியில் 500 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

தாம்பரம்: தாம்பரம் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு 16,500 அபராதம் விதிக்கப்பட்டது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் சார்பில் வியாபாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தடையை மீறி கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவது தொடர்கிறது. இந்நிலையில், தாம்பரம் மார்க்கெட் பகுதி, முத்துரங்கம் சாலை, சண்முகம் சாலை, மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் தாம்பரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பைய ராஜா தலைமையில் சுகாதார அலுவலர் மொய்தீன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை கடைகளில் இருந்து பறிமுதல் செய்தனர். பின்னர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள்  உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தவர்களுக்கு 16,500 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற பிளாஸ்டிக் பறிமுதல் நடைபெறும் என்றும், பொதுமக்கள் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும், தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் நகராட்சி ஆணையர் தாம்பரம் நகர பொது மக்களை கேட்டுக்கொண்டார்.

Tags : area ,Tambaram ,
× RELATED வாட்டி வதைக்கும்...