×

மாவட்ட கவுன்சிலர் பதவி 18 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான முடிவுகள் அனைத்தும் நேற்று பிற்பகல் 2 மணிக்கு வெளியானது. அதன்படி மொத்தமுள்ள 24 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 18 இடங்களை கைப்பற்றி உள்ளது. அதிமுக கூட்டணி 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, திருவள்ளூர் மாவட்ட குழு தலைவர் பதவியை திமுக பிடித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 24 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில், திமுக கூட்டணியில், திமுக 17, காங்கிரஸ் 1 என 18 இடங்களையும், அதிமுக கூட்டணியில் அதிமுக 5, பாமக 1 என 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிக இடங்களை திமுக.,வே கைப்பற்றி உள்ளதால் இக்கட்சியே மாவட்ட குழு தலைவர் பதவியை கைப்பற்ற வாய்ப்புள்ளது.


எண்    வெற்றி  பெற்றவர்    கட்சி
1    சாந்திபிரியா      (அதிமுக)
2    எஸ்.விஜயகுமாரி    (திமுக)
3    ஹேமாவதி     (அதிமுக)
4     பாண்டுரங்கன்    (அதிமுக)
5    கே.குமார்    (அதிமுக)
6    எஸ்.சுதாகர்    (திமுக)
7    எம்.சித்ரா    (திமுக)  
8    எம்.சாரதா    (திமுக)
9    எஸ்.ராமஜெயம்     (திமுக)
10    டி.தேசராணி    (திமுக)  
11     டி.அருண்ராம்    (திமுக)  
12    ஜி.உமாமகேஸ்வரி    (திமுக)  

13    டி.தேவி     (காங்கிரஸ்)
14    ஜி.கீதா    (திமுக)
15    அம்மினி மகேந்திரன்    (அதிமுக)
16    டி.தென்னவன்    (திமுக)
17.    கே.யு.சிவசங்கரி    (திமுக)  
18    சி.சரஸ்வதி    (திமுக)  
19    பி.இந்திரா    (திமுக)
20    எம்.சதீஷ்குமார்    (திமுக)  
21    தினேஷ்குமார்    (பாமக)
22    டி.தேசிங்கு    (திமுக)
23    ஏ.ஜி.ரவி    (திமுக)  
24    எஸ்.சக்திவேல்    (திமுக) 

Tags : DMK ,coalition ,district ,
× RELATED நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம்