பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக காட்டாங்கொளத்தூர்  - கூடுவாஞ்சேரி இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே வரும் 7, 10, 11, 14, 17 ஆகிய தேதிகளில் காலை 10.08, 10.56 மணிக்கு இயக்கப்படும் ரயில் கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையேயும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 11.48 மணிக்கு இயக்கப்படும் ரயில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயும், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே காலை 11.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையேயும், திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் ரயில் திருமால்பூர் - கூடுவாஞ்சேரி இடையேயும், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 12.20 மணிக்கு இயக்கப்படும் ரயில் செங்கல்பட்டு - தாம்பரம் இடையேயும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், பட்டாபிரம் மிலிடரி சைடிங் இ-டிபார்ட்மெண்ட் - மூர்மார்க்கெட் இடையே 7ம் தேதி காலை 3.20 மணிக்கு இயக்கப்படும் ரயில் பிடிஎம்எஸ் இ-டிபார்ட்மெண்ட் - ஆவடி இடையேயும், மூர்மார்க்ெகட் - பட்டாபிரம் மிலிடரி சைடிங் இ-டிபார்ட்மெண்ட் இடையே 6ம் தேதி இரவு 10.35 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆவடி - பிடிஎம்எஸ் இ-டிபார்ட்மெண்ட் இடையேயும், வேளச்சேரி - பட்டாபிரம் மிலிடரி சைடிங் இ-டிபார்ட்மெண்ட் இடையே 6ம் தேதி இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் பட்டாபிரம் - பிடிஎம்எஸ் இடையே ரத்து செய்யப்பட்டு ஆவடி - திருநின்றவூர் இடையே இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : cancellation ,Southern Railway ,
× RELATED மே மாதத்துக்குள் கொரோனா கட்டுக்குள்...