×

டாஸ்மாக் பாரில் தகராறு சுங்க அதிகாரிக்கு அடி உதை: உரிமையாளரிடம் விசாரணை


சென்னை: டாஸ்மாக் பாரில் அதிக விலைக்கு ஏன் சிகரெட் விற்பனை செய்கிறீர்கள் என்று தட்டிக்கேட்ட சுங்கத்துறை அதிகாரிக்கு சரமாரியாக அடி உதை விழுந்தது. இது தொடர்பாக பார் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மடிப்பாக்கம் ராம் நகரை சேர்ந்தவர் உதீப் ஜெயின் (39). சுங்கத்துறை அதிகாரி. இவர் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்ேபாது, பார் உரிமையாளர் கார்த்திக் (34) என்பவரிடம் சிகரெட் கேட்டுள்ளார்.  அவர் சிகரெட் விலையை கூறியதும், சுங்கத்துறை அதிகாரி உதீப் ஜெயின் வழக்கத்தை விட அதிக விலைக்கு ஏன் விற்பனை ெசய்கிறீர்கள், என்று கேட்டுள்ளார். அதற்கு பார் உரிமையாளர், விருப்பம் இருந்தால் வாங்குங்கள். இல்லையெனில் இடத்தை காலி செய்யுங்கள், என கூறியுள்ளார்.

இதனால், உதீப் ஜெயினுக்கும், பார் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பார் உரிமையாளர் கார்த்திக், பார் ஊழியர்களுடன் சேர்ந்து, சுங்கத்துறை அதிகாரியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சுங்கத்துறை அதிகாரி தன்னை தாக்கிய பார் உரிமையாளர் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் பார் உரிமையாளர் கார்த்திக்கை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் தேனாம்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Task force ,customs officer ,owner ,
× RELATED நாடாளுமன்றத் தொகுதி வாரியாக அதிமுக...