×

ராம்ராஜ் காட்டன் சார்பில் அட்ஜஸ்டபிள் வேட்டி, சட்டைகள் அறிமுகம்

சென்னை:   ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சார்பில் புதிய அறிமுகமாக ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டிகள் இடுப்பின் அளவிற்கு தகுந்தார் போல் ஒரே வேட்டியில் பல விதமான அளவுகளை கொண்டு  தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்டிக்கு அட்ஜஸ்டபிள் வேட்டிகள் என பெயரிட்டு வேட்டியின் கரையில் உள்ள நிறத்திற்கு தகுந்தார் போல் சர்ட்களும் தயாரிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ராம்ராஜ் காட்டன் அலுவலகத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் அட்ஜஸ்டபிள் வேட்டியை அறிமுகம் செய்தார். இதன் விலை ₹1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் பேசியதாவது:  ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சார்பில் வேட்டி வாரத்தை அறிமுகபடுத்தி ஆண்டு தவறாமல் வேட்டி தினத்தை கடைபிடித்து வருகிறோம்.

அதன்படி 4ம் ஆண்டு வேட்டி வாரம் 7ம் தேதி வரை 7 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. முதல் ஆண்டு வேட்டி வாரத்திற்கு ராம்ராஜ் காட்டன் வேட்டிகள் 100க்கு விற்பனை செய்யப்பட்டது. இரண்டாம் ஆண்டு வேட்டி வாரத்திற்கு வெள்ளை வேட்டி மற்றும் சர்ட்கள் ₹500க்கு வழங்கப்பட்டது. 3ம் ஆண்டு ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி மற்றும் அதற்கு தகுந்த நிற சர்ட்கள் அறிமுகப்படுத்தி 700க்கு விற்பனை செய்தோம். இந்த ஆண்டு அட்ஜஸ்டபிள் வேட்டிகளை அறிமுகப்படுத்தி 1000 என விலை நிர்ணையித்துள்ளோம். இதனை அனைவரும் பயன்படுத்தி நாட்டின் பெருமையை எடுத்துரைக்கும் விதமாக வேட்டி வாரத்தை கடைபிடிக்க வேண்டும். சுமார் 3 லட்சம் வேட்டிகள் மற்றும் சர்ட்கள் விற்பனைக்கு அனுப்பியுள்ளோம். இவ்வாறு கூறினார்.  இதில் ராம்ராஜ் நிறுவன அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Introduction ,Wettie ,
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...