×

20 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு வெற்றி பெற்றவர்களின் விபரம்

பெரம்பலூர்,ஜன.3: பெரம்பலூர் ஒன்றியத்தில் மொத்தம் 20 ஊராட்சிகள் உள்ளன. இதில் புதுநடுவலூர் ஊராட்சித் தலைவராக ஜெயந்தி நீல்ராஜ் ஏற்கனவே மனுத்தாக்கலின் போதே, எதிர்தரப்பு வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதால் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் மீதமுள்ள 19 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நடந்தத் தேர்தலில் பதிவான வாக்குக ளுக்கு வாக்குகள் எண்ணும் பணி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி யில் நேற்று (2ம் தேதி) நடந்தது. இதன்படி, எசனை ஊராட்சி தலைவராக சத்யா பன்னீர்செல்வம், அம்மாபாளையம் ஊராட் சித் தலைவராக பிச்சை பிள்ளை, சத்திரமனை ஊராட்சித் தலைவராக கவிதா முத்துக்குமார், கீழக் கரை ஊராட்சித் தலைவ ராக ஜெயந்தி செல்லப்பி ள்ளை, களரம்பட்டி ஊரா ட்சி தலைவராக சுதாகர்(எ) ராஜா, கல்பாடி ஊராட்சித் தலைவராக சக்திவேல், கோனேரி பாளையம் ஊராட்சி தலைவராக கலையரசி, நொச்சியம் ஊராட்சித் தலைவராக அலமேலு, வேலூர் ஊராட்சித் தலைவராக அம்பிகை சிவசண்முகம், வடக்குமா தேவி ஊராட்சித் தலைவராக தங்கராஜ், பொம்மனப் பாடி ஊராட்சித் தலைவராக கணேசன், ஆலம்பாடி ஊராட்சித் தலைவராக கல்பனா, எளம்பலூர் ஊராட்சித் தலைவராக சித்ராதேவி, கவுல்பாளையம் ஊராட்சித் தலைவராக கலைச்செல்வன், செங்கு ணம் ஊராட்சித் தலைவ ராக சந்திரா, லாடபுரம் ஊராட்சித் தலைவராக சாவித்திரி பெரியசாமி, மேலப்புலியூர் ஊராட்சித் தலைவராக ராஜமோகன், சிறுவாச்சூர் ஊராட்சித் தலைவராக ராஜேந்திரன், அய்யலூர் ஊராட்சித் தலைவராக ராமராஜ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ள னர். நேற்று வாக்கு எண் ணிக் கையின் முடிவில் வெற்றி பெற்ற 19 வேட்பாளர்களுக் கும், பெரம்பலூர் ஒன்றியத் தேர்தல் நடத்தும் அலுவலர் மோகன், வெற்றி பெற்றதற் கான சான்றிதழ்களை வழங்கினார்.

Tags : winners ,Chairpersons ,Government ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...