×

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 இடங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி

புதுக்கோட்டை, ஜன.3: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 13இடங்களில் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் கட்டமாக அன்னவாசல், விராலிமலை, குன்னண்டார்கோவில், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் 97 ஆயிரத்து 226 வாக்காளர்கள், விராலிமலை ஒன்றியத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 455 வாக்காளர்கள், குன்னண்டார்கோவில் ஒன்றியத்தில் 65 ஆயிரத்து 43 வாக்காளர்கள், புதுக்கோட்டை ஒன்றியத்தில் 69 ஆயிரத்து 581 வாக்காளர்கள், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 65 ஆயிரத்து 11 வாக்காளர்கள், கறம்பக்குடி ஒன்றியத்தில் 74 ஆயிரத்து 475 வாக்காளர்கள் என மொத்தம் 4 லட்சத்து 79 ஆயிரத்து 791 வாக்காளர்கள் வாக்களித்தனர். புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 80.87 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது. இதேபோல அன்னவாசல் ஒன்றியத்தில் 77.99 சதவீதமும், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 81.88 சதவீதமும், கறம்பக்குடி ஒன்றியத்தில் 80.51 சதவீதமும், குன்னண்டார்கோவில் ஒன்றியத்தில் 81.46 சதவீதமும் வாக்குகள் பதிவாகியது. விராலிமலை ஒன்றியத்தில் 81.96 சதவீதமும் பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 80.69 சதவீதம் வாக்குப்பதிவாகி இருந்தது. இதேபோல திருவரங்குளம், அரிமளம், திருமயம், பொன்னமராவதி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் 2ம் கட்டமாக கடந்த 30ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த 7 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 5 லட்சத்து 78 ஆயிரத்து 958 வாக்காளர்கள் வாக்களித்தனர். திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 80.41 சதவீதமும், அரிமளம் ஒன்றியத்தில் 73.85 சதவீதமும், திருமயம் ஒன்றியத்தில் 68.21 சதவீதமும், பொன்னமராவதி ஒன்றியத்தில் 72.39 சதவீதமும், அறந்தாங்கி ஒன்றியத்தில் 54.11 சதவீதம், ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் 71.49 சதவீதமும், மணமேல்குடி ஒன்றியத்தில் 65.45 சதவீதமும் வாக்குப்பதிவாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 69.05 சதவீதம் பதிவாகி உள்ளது. இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நடைபெற்றது. வெற்றி பெற்ற தலைவர், கிராம வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர் ஆகிய வேட்பாளர்களுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags : Rural Local Elections ,Pudukkottai Districts ,
× RELATED 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் சீட்...