×

அதிமுகவிடம் வெற்றி பெற்ற கணவர் பாஜகவிடம் தோல்வியுற்ற மனைவி

மண்ணச்சநல்லூர், ஜன.3: மணச்சநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட 4வது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் தர் போட்டியிட்டார். இந்த போட்டியில் திமுக வேட்பாளர் தர் 2,511 ஓட்டுகள் பெற்று 1,307 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் 1,204 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். திமுக வேட்பாளர் தரின் மனைவி கீதா, மண்ணச்சநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட எதுமலை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 1வது வார்டில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் பரமேஸ்வரி குமார் போட்டியிட்டார். இதில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட பாஜ வேட்பாளர் பரமேஸ்வரி குமார் 1,859 வாக்குகள் பெற்று 132 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கீதா தர் 1,727 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். ஒரே வீட்டில் கணவன், மனைவி இருவரும் திமுக சார்பில் இரண்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டதில் கணவர் அதிமுகவிடம் வென்றதும், மனைவி பாஜவிடம் தோற்றதுமான ருசிகரமான சம்பவம் நடந்துள்ளது.

Tags : AIADMK ,BJP ,
× RELATED ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக உள்பட மும்முனைப்போட்டி