×

ஓட்டு எண்ணிக்கை தாமத புகார் அலுவலருக்கு கலெக்டர் டோஸ்

துறையூர், ஜன.3: துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கு பகளவாடி ஜெயராம் இன்ஜினியரிங் கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டு இருந்தது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் என்பதால் அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள், கட்சியினர் காலை 7 மணி முதலே கல்லூரி வாசலில் குவிந்தனர். ஓட்டு எண்ணிக்கைக்கு ஆயத்தமாகி வந்தநிலையில் முதலில் பதிவான 584 தபால் ஓட்டுகளை எடுத்து எண்ணத் தொடங்கி முடிவு வெளியாகவில்லை. மொத்தம் 19 சுற்றுகள் எண்ணி முடிவு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒரு வழியாக முதல் ரவுண்ட் காலை 10 மணிக்கு எண்ணத் தொடங்கியது. அதுவும் முடிவு அறிவிக்காமல் இருந்தது. முன்னணி நிலவரம், முடிவுகள் குறித்து நிருபர்கள் தேர்தல் அலுவலரிடம் கேட்டபோது தபால் ஓட்டு குறித்து இறுதி முடிவு வந்தால்தான் முதல் ரவுண்ட் முடிவு அறிவிக்க முடியும் என்று தெரிவித்தார். பகல் 12 மணி ஆகியும் எந்த விபரமும் தெரியாமல் அனைவரும் அதிருப்தி அடைந்தனர். ஓட்டு எண்ணிக்கையை ஆய்வு செய்ய மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வந்து பார்வையிட்டு, வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் முடிவை கூட அறிவிக்க முடியாமல் இருப்பதைக்கண்டு அதிகாரிக்கு விரைவாக பணிகள் செய்து அறிவிக்க அறிவுறுத்தினார். அவர் சென்று மதியம் 4 மணி வரையிலும் துறையூர் ஊராட்சி ஒன்றிய ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

Tags : Collector ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...