×

விளாத்திகுளம், குளத்தூர் பகுதியில் இன்று மின்தடை

தூத்துக்குடி, ஜன.3: விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக விளாத்திகுளம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பிள்ளையார்நத்தம், கமலாபுரம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம் பகுதிகளில் காலை 8 முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. குளத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கீழவைப்பாறு, வைப்பாறு, வேப்பலோடை, குளத்தூர், மார்த்தாண்டம்பட்டி, பகுதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. சூரங்குடி துணை மின் நிலையம் மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் பகுதிகளில் காலை 8 முதல் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. தூத்துக்குடி ஊரக மின்வினியோக செயற்பொறியாளர் உமையொருபாகம் தெரிவித்து உள்ளார்.

Tags : Vilathikulam ,Klathoor ,
× RELATED வெம்பக்கோட்டை அணையில் தண்ணீர்...