×

சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியில் 15வது ஆண்டு தொடக்க விழா

தூத்துக்குடி, ஜன.3: தூத்துக்குடியில் செயல்படும் சுரேஷ் அகாடமியின் 15வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தர்மர் தலைமை வகித்தார். பேச்சாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். போட்டி தேர்வு பயிற்சியாளர் அந்தோணி பட்டுராஜ் வரவேற்றார். சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சுகேஷ்சாமுவேல் கூறியதாவது, கடந்த 14 ஆண்டுகளில் 14ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று அரசு பணிக்கு சென்றுள்ளனர். அதிகமான அரசு பணியாளரை உருவாக்கிய சிறந்த போட்டி தேர்வு பயிற்சி நிறுவனமாக திகழ்கிறது என்றார்.  போட்டி தேர்வில் வெற்றி பெறுவது குறித்து இந்திய தகவல் அலுவலர் பழனிசாமி பேசினார். நிகழ்ச்சியில் குருப்1 வெற்றியாளர்கள் அனிதா, தேவி, சித்ராதேவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 2019ல் வெற்றி பெற்றவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இணையதள புத்தக விற்பனை வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. போட்டி தேர்வு குறித்த கையேடு வெளியிடப்பட்டது. வங்கி தேர்வு ஓருங்கிணைப்பாளர் ராஜா, ராதாகிருஷ்ணன், செல்வக்குமார், சுரேஷ் அகாடமி ஆய்வு மேம்பாட்டு குழு ஓருங்கிணைப்பாளர் பாலகுரு, மெர்க்கன்டைல் வங்கியின்  முன்னாள் இயக்குநர் ராஜேந்திரன், தூத்துக்குடி தொழிலதிபர் எடிசன், தலைமை செயலக உதவி அலுவலர் வள்ளிக்குமரன் மற்றும் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


Tags : Suresh IAS Academy ,
× RELATED குரூப் 2 நேர்காணல் பதவி தேர்வு சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் சிறப்பிடம்