×

கோவில்பட்டியில் வெற்றி பெற்ற பஞ். தலைவர்கள்

கோவில்பட்டி, ஜன. 3:கோவில்பட்டி ஒன்றியத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றோர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.  கோவில்பட்டி ஒன்றியத்தில் மொத்தம் 38 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இதில் சத்திரப்பட்டி பஞ்சாயத்து தலைவராக முருகலட்சுமி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 37 பஞ்சாயத்துக்களின் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் 19 வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை கோவில்பட்டி லட்சுமிமில் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் நடந்தது. இதில் பஞ்சாயத்து  வாரியாக வெற்றிபெற்ற பஞ்சாயத்து தலைவர்கள். மூப்பன்பட்டி -  லிங்கேஸ்வரி,ஆவல்நத்தம் -   காளியம்மாள், இனாம் மணியாச்சி - ஜெயலட்சுமி, முடுக்கு மீண்டான்பட்டி - கண்ணாயிரம் முத்து.

Tags : Punch ,Templepatti ,Leaders ,
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...