×

சாத்தான்குளம் ஒன்றியத்தில் பஞ். தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றோர் விவரம்

சாத்தான்குளம், ஜன. 3: சாத்தான்குளம் ஒன்றியத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் 15 பேர்  வெற்றி பெற்றனர்.  சாத்தான்குளம் ஒன்றியத்தில் 24 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அதற்கான தேர்தல் 27ம்தேதி நடந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடந்தது. இதில் நேற்று மாலை வரை 15 பஞ்சாயத்து தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் கோமானேரி பஞ்சாயத்து தலைவராக கலுங்கடிமுத்து, கொம்பன்குளம் பஞ்சாயத்து தலைவராக வயனபெருமாள், நெடுங்குளம் பஞ்சாயத்து தலைவராக சகாயஎல்பின், புதுக்குளம் பஞ்சாயத்து தலைவராக பாலமேனன், பழங்குளம் பஞ்சாயத்து தலைவராக செல்வக்கனி, எழுவரைமுக்கி பஞ்சாயத்து தலைவராக ஜெயா, பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவராக அழகேசன், சுப்பராயபுரம் பஞ்சாயத்து தலைவராக சுயம்புத்துரை, செட்டிக்குளம் பஞ்சாயத்து தலைவராக சிவகாமிசுந்தரி, பிடானேரி பஞ்சாயத்து தலைவராக கலைமெர்சி, பண்டாரபுரம் பஞ்சாயத்து  தலைவராக பாலசிங், தச்சமொழி பஞ்சாயத்து தலைவராக பிரேம்குமார், தாமரைமொழி பஞ்சாயத்து தலைவராக சாந்தா, அமுதுண்ணாக்குடி பஞ்சாயத்து தலைவராக முருகன், நடுவக்குறிச்சி பஞ்சாயத்து தலைவராக சபிதா ஆகியோர்  வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டனர். மற்ற பஞ்சாயத்து தலைவர்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

Tags : PUNG ,
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது