×

நாமக்கல்லில் பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை

நாமக்கல், ஜன.3: நாமக்கல்லில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை விறு விறுப்பாக நடைபெற்றது. ஒரு சில இடங்களில் நள்ளிரவை தாண்டியும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 2 கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று மாவட்டம் முழுவதும் 15 மையங்களில் நடைபெற்றது. அனைத்து மையங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. வாக்கு வகை பிரிப்பு அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. ஒவ்வொரு சுற்றுக்கும் 5 ஊராட்சி மன்றத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர் என 4 பதவிக்கும் தனித்தனி அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பெரும்பாலான மையங்களில், இரவு 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. பெரிய ஒன்றியங்களில் இரவு 10 மணியை தாண்டியும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாமக்கல் ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்றிரவு 6.30 மணிக்கு முடிவடைந்தது. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு மட்டும் இரவு 8 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணியில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டனர். இதனால், வாக்கு எண்ணிக்கை எந்தவித தடங்கலும் இன்றி நடைபெற்றது. அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அறைகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இதனால், வாக்கு எண்ணிக்கை வேகமாக நடைபெற்றது. செல்லாத வாக்குகள் அதிக அளவில் இருந்ததையும் காணமுடிந்தது.

Tags : Namakkal ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...