×

நாமக்கல் ஒன்றியத்தில் 21 இடங்களில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள் விபரம்

நாமக்கல், ஜன.3: நாமக்கல் ஒன்றியத்தில் 21 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் 25 ஊராட்சிகள் உள்ளன. இதில், 4 ஊராட்சி மன்றத் தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 21 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் விபரம் அறிவிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு:  ரங்கப்பநாயக்கன்பாளையம் -சத்யகலா, சிலுவம்பட்டி -பழனிவேல், காதப்பள்ளி- சுதா, தளிகை- ருக்மணி, சிங்கிலிப்பட்டி- சரளா, விட்டமநாயக்கன்பட்டி- ரீத்தா பழனிசாமி,  எர்ணாபுரம்- மாரப்பன், கீரம்பூர்- சிந்துஜா, கீழ் சாத்தம்பூர்- விஜயா, கோனூர்- தனலட்சுமி, நரவலூர்- பழனியம்மாள், ராசாம்பாளையம்- சுந்தரி, வேட்டாம்பாடி- சுப்ரமணி, திண்டமங்கலம்- ராமசாமி, தொட்டிப்பட்டி- புவனேஸ்வரி, வகுரம்பட்டி- ராஜா(எ) ரகுமான், வள்ளிபுரம்- காந்திமதி, வீசாணம்- நாச்சிமுத்து, மரூர்பட்டி- சுசீலா, ஆவல்நாயக்கன்பட்டி- பழனிசாமி, சிவியாம்பாளையம்- கோபி. இவர்களுக்கு வெற்றி சான்றிதழை, தேர்தல் அதிகாரி தேன்மொழி வழங்கினார்.

Tags : panchayat leaders ,places ,Namakkal Union ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்