×

மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட முன்னாள் எம்பி சுந்தரம் வெற்றி

ராசிபுரம், ஜன.3: நாமக்கல் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட முன்னாள் எம்பி சுந்தரம் வெற்றி பெற்றுள்ளார். வெண்ணந்தூர் ஒன்றியக்குழு 1வது வார்டில் திமுக சார்பில் துரைசாமி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் பெருமாள் போட்டியிட்டார். இதில், துரைசாமி 1919 வாக்குகள் பெற்றார். பெருமாள் 1964 வாக்குகள் பெற்றார். பெருமாள் வெற்றிபெற்றார். 2வது வார்டில் திமுக சார்பில் அலமேலு, அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் தங்கப்பொண்ணு ஆகியோர் போட்டியிட்டனர். தங்கப்பொண்ணு 1872 வாக்குகள் பெற்றார். அலமேலு 2179 வாக்குகள் பெற்று பெற்றிபெற்றார். 3வது வார்டில் திமுக சார்பில் பெரியசாமியும், அதிமுக சார்பில் பழனிவேலு ஆகியோர் போட்டியிட்டனர். பெரியசாமி 423 வாக்குகள் பெற்றார். பழனிவேலு 891 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 4 வார்டில் திமுக சார்பில் துரைசாமியும், அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் தாமோதரன் ஆகியோர் போட்டியிட்டனர். தாமோதரன் 1779 வாக்குகள் பெற்றார். துரைசாமி 2655 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவர், திமுக ஒன்றிய பொறுப்பாளர் ஆவார்.

5வது வார்டில் திமுக சார்பில் நாராயணசாமியும், அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் மணிகண்டன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், மணிகண்டன் 1577 வாக்குகள் பெற்றார். நாராணசாமி 2257 வாக்குகள் பெற்று பெற்றிபெற்றார். 6வது வார்டில் திமுக சார்பில் ராமலிங்கமும், அதிமுக சார்பில் பாலசந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், பாலசந்திரன் 1907 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். ராமலிங்கம் 1774 வாக்குகள் பெற்றார். 7வது வார்டில் திமுக சார்பில் பாலாமணி, அதிமுக சார்பில் தங்கம்மாள் போட்டியிட்டனர். தங்கம்மாள் 2611 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பாலாமணி 1149 வாக்குகள் பெற்றார். 8வது வார்டில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பத்மாவதியும், திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் செல்வி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், செல்வி வெற்றிபெற்றார். பத்மாவதி 1440 வாக்குகள் பெற்றார். 9வது வார்டில் திமுக சார்பில் திலகவதி, அதிமுக சார்பில் சரோஜினி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், சரோஜினி 2651 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திலகவதி 2069 வாக்குகள் பெற்றார். 10வது வார்டில் திமுக சார்பில் கோமதியும், அதிமுக சார்பில் சித்ரா ஆகியோர் களம் கண்டனர். இதில், சித்ரா 2326 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கோமதி 1661 வாக்குகள் பெற்றார். வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் எம்பி சுந்தரம் வெற்றிபெற்றார். இவர் 21,811 வாக்குகள் பெற்றார். திமுக கூட்டணியில் கொமதேக சார்பில் போட்டியிட்ட ஜெயகுமார் 15582 வாக்குகளும், தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மெய்ஞானமூர்த்தி 1356 வாக்குகளும் பெற்றனர்.

Tags : Sundaram ,District Councilor ,
× RELATED குமரியில் அனுமதியின்றி கூட்டம்...