×

சேந்தமங்கலம் ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது சேந்தமங்கலம், ஜன.3: சேந்தமங்கலம் ஒன்றியத்தை திமுக கைப்பற்றியுள்ளது.

சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 9 வார்டுகள் உள்ளது. 1வது வார்டில் அதிமுக சார்பில் சென்னப்பன், திமுக சார்பில் சரசு ஆகியோர் போட்டியிட்டனர். இதில், சரசு வெற்றி பெற்றார். 2வது வார்டில் திமுக சார்பில் டயானா போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கோகிலா வெற்றிபெற்றார். 3வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்வியை திமுக வேட்பாளர் சுபாஷினி தோற்கடித்தார். 4வது வார்டில் அதிமுக சார்பில் செல்வி போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கீதா வெற்றிபெற்றார். 5வது வார்டில் அதிமுக சார்பில் அனிதா போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சித்ரா வெற்றிபெற்றார். 6வது வார்டில் அதிமுக சார்பில் மேரி பாஸ்கர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மணிமாலா வெற்றிபெற்றுள்ளார். 7வது வார்டில் திமுக சார்பில் அருண் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் சண்முகம் வெற்றிபெற்றார். 8வது வார்டில் திமுக சார்பில் ராணி போட்டியிட்டார். அவரை எதித்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஸ்ரீபாலன் வெற்றிபெற்றார். 9வது வார்டில் திமுக சார்பில் பெரியசாமி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் கணேசன் களம் இறங்கினார். அவர்களுக்கிடையே நேற்று நள்ளிரவு வரையிலும் தொடர்ந்து இழுபறியான நிலை காணப்பட்டது. முடிவில் பெரியசாமி வெற்றி பெற்றார்.  9 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 6 இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் சேந்தமங்கலம் ஒன்றியத்தை திமுக கைப்பற்றியுள்ளது. இதேபோல், மாவட்ட ஊராட்சிக்குழு 10வது வார்டில் அதிமுக சார்பில் வள்ளியம்மாள் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராசாத்தி அருள்மணி வெற்றிபெற்றுள்ளார்.

Tags : DMK ,Sandamangalam Union ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி