கடத்தூர் அருகே அரசு பள்ளியில் குடிநீர் தட்டுப்பாடு

கடத்தூர், ஜன.3: கடத்தூர் அருகே தா.அய்யம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிநீர் இல்லாததால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடத்தூர் அடுத்த தா.அய்யம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களின் பயன்பாட்டிற்காக, பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டியில், தண்ணீர் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். மேலும் குடிநீர் குழாய்கள் அனைத்தும் துருப்பிடித்த நிலையில் உள்ளது. எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பி, தினமும் சீராக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

>