பாலசமுத்திரத்தில் பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

கடத்தூர், ஜன.3: கடத்தூர் அருகே பாலசமுத்திரம் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடத்தூர் அடுத்த குருபரஅள்ளி பாலசமுத்திரம் சாலை, கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலை போக்குவரத்திற்கு தகுந்ததாக இல்லை. இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்களது தோட்டத்தில் விளையும் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, பழுதடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,road collapse ,Balasamudram ,
× RELATED மக்கள் கடும் அவதி நடவடிக்ைக எடுக்க...