×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள்

கிருஷ்ணகிரி, ஜன.3:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் தெரிய வந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 10 ஒன்றியங்கள் உள்ளன. இதில் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 20 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் 27 கவுன்சிலர், தளி ஒன்றியத்தில் 30 கவுன்சிலர், ஊத்தங்கரை ஒன்றியத்தில் 22 கவுன்சிலர், மத்தூர் ஒன்றியத்தில் 17 கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதே போல், ஓசூர் ஒன்றியத்தில் 16 கவுன்சிலர் பதவிக்கும், கெலமங்கலம் ஒன்றியத்தில் 19 கவுன்சிலர், பர்கூர் ஒன்றியத்தில் 30 கவுன்சிலர், சூளகிரி ஒன்றியத்தில் 25 கவுன்சிலர், வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் 15 கவுன்சிலர் பதவி என மொத்தம் 221 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.  இதில், சூளகிரி ஒன்றியத்தில் 2 ஒன்றிய கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மொத்தம் 219 கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்து, ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு: தளி ஒன்றியம்: வார்டு எண் 1ல் நாகராஜ் (இ.கம்யூ), வார்டு எண் 2ல் சவுமியா (இ.கம்யூ), 3ல் பிரசாந்த் (இ.கம்யூ), 4வது வார்டில் நாகஸ்ரீ (திமுக), 5வது வார்டில் நாகவேணி (திமுக), 6வது வார்டில் அனுபா சுரேஷ் (திமுக) 7வது வார்டில் பிரபாகர் (திமுக), 8வது வார்டில் பாரதம்மா (சுயேச்சை) வெற்றி பெற்றுள்ளனர்.

ஓசூர் ஒன்றியம்: 1வது வார்டில் சத்தியா (அதிமுக), 2வது வார்டில் உமா (அதிமுக), 3வது வார்டில் நாகரத்தினா (அதிமுக), 4வது வார்டில் நாராயணசாமி (அதிமுக), 5வது வார்டில் ராதா கஜேந்திரமூர்த்தி (சுயே) வெற்றி பெற்றுள்ளனர்.
சூளகிரி ஒன்றியம்: 5வது வார்டில் லாவண்யா (அதிமுக), 21வது வார்டில் வனிதா சீனிவாசன் (திமுக) ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதைத் தவிர வார்டு எண் 1ல் ரத்தினம்மா (திமுக), 2ல் யசோதா (அதிமுக), 4ல் மஞ்சுளா (சுயேச்சை)வெற்றி பெற்றுள்ளனர். காவேரிப்பட்டணம் ஒன்றியம்: 1வது வார்டில் நித்யா (திமுக),  2வது வார்டில் அனுமுத்தன் (சுயேட்சை), 3வது வார்டில் அம்மு (திமுக) வெற்றி பெற்றுள்ளனர்.
மத்தூர் ஒன்றியம்: வார்டு எண் 1ல் பாலசுப்பிரமணி (திமுக), 2tவது வார்டில் விஜயலட்சுமி (திமுக) வெற்றி பெற்றுள்ளனர்.வேப்பனஹள்ளி ஒன்றியம்: 1வது வார்டில் சோமசேகர் (திமுக) வெற்றி பெற்றுள்ளார்.

Tags : Winners ,panchayat unions ,Krishnagiri district ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே பாம்பு கடித்த பெண்ணுக்கு சிகிச்சை