×

பாலக்கோட்டில் வாக்கு எண்ணும் மையத்தில் செயல்படாத சிசிடிவி கேமரா

பாலக்கோடு, ஜன.3:பாக்கோடு வாக்கு எண்ணும் மையத்தில், சிசிடிவி கேமரா செயல்படாததால், அதிகாரிகளிடம் வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.
பாலக்கோடு அரசு கலைக் கல்லூரியில் நேற்று காலை 7மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அப்போது வேட்பாளர், முகவர்கள் உள்ளே வந்தனர். அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த, கண்காணிப்பு கேமராக்களின் ஒயர்கள் துண்டிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தேர்தல் மண்டல அதிகாரி கோவிந்தனிடம் இது குறித்து புகார் கூறினர். அப்போது அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்கள், முகவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கண்காணிப்பு கேமரா சரி செய்யப்பட்டது. பின்னர் இரண்டரை மணி நேரம் தாமதமாக, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த கலெக்டர் மலர்விழி சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியகுழு 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, திமுக சார்பில் விஜயலட்சுமி அன்பழகன் போட்டியிட்டார். நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது. 11மணியளவில் 517வாக்கு வித்தியாசத்தில் விஜயலட்சுமி அன்பழகன் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். அதற்கான சான்றிதழை அறை எண் 20ல் வந்து பெற்று கொள்ளும்படி அதிகாரிகள் அறிவித்தனர். அறைக்கு சென்று விஜயலட்சுமிக்கு மாலை 6மணி வரை சான்றிதழ்கள் வழங்கவில்லை. இது குறித்து அதிகாரிகள் எந்த தகவல் தெரிக்காமல் இருந்தனர். இதை கண்டித்து, தேர்தல் மண்டல அலுவலர் கோவிந்தன், பிடிஓ அன்பழகனை, விஜயலட்சுமி அன்பழகன் மற்றும் ஆதரவாளர்களுடன் சென்று முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் சமாதானம் செய்து, சான்றிதழ் கொடுக்க அறிவிப்பு வெளியிடுவதாக கூறியதன் பேரில் சமாதானம் அடைந்தனர். ஆனால், நேற்று இரவு 10மணியாகியும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்தனர்.



Tags : ballot counting center ,Balakot ,
× RELATED டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் பாலக்கோடு வாலிபர் பங்கேற்பு