×

சாணார்பட்டி யூனியன் கவுன்சில் திமுக வேட்பாளர்கள் வெற்றி முகம்

திண்டுக்கல், ஜன. 3: சாணார்பட்டி ஒன்றியத்தில் கவுன்சிலர்களுக்கு போட்டியிட்டவர்களில் பெரும்பாலான கவுன்சில்களில் திமுக வேட்பாளர் வெற்றி பெறும் நிலையில் உள்ளனர். சாணார்பட்டி யூனியன் அலுவலகத்தில் 21 பஞ்சாயத்துகளுக்கும், 19 ஒன்றுய கவுன்சிலுக்கும், 2 மாவட்ட கவுன்சிலர்கலுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஒன்றி கவுன்சிலர் பதவிக்கு 1வது வார்டு உறுப்பினராக போட்டியிட்ட பானுமதி (திமுக) 2025 வாக்குகளும், 2வது வர்டு முத்துலெட்சுமி 2425 வாக்குகளும், 3வது வார்டு அமிர்ததர்சினி (திமுக) 23884, 4வது வார்டு வசக்தி பொன்னழகர் (அதிமுக), 5வது வார்டு ராஜம்மாள் (திமுக) 2116 ஆகியோர் முன்னிலையில் இருந்தனர். மாவட்ட கவுன்சிலர் வடக்கு லலிதா மோகன் (திமுக) இரண்டாயிரம் வாக்குகள் பெற்று முன்னனியில் இருந்தார். இதில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறும் நிலையில் இருந்தனர்.

Tags : DMK ,victory ,union council ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...