×

வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு சான்றிதழ் தர தாமதம் பசியால் தவித்த உறுப்பினர்கள்

வத்தலக்குண்டு, ஜன. 3: நிலக்கோட்டை உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் 200 பேருக்கு சான்றிதழ் தராமல் 5 மணி நேரம் இழுத்தடிப்பு செய்ததால் உறுப்பினர்கள் பசியால் தவித்தனர். நிலக்கோட்டையில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை துவங்கியது. ஊராட்சியில் மன்ற உறுப்பினர்களுக்கு போட்டியிட்டவர்கள் வாக்கு முதலில் எண்ணப்பட்டது. இதில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் 200 பேருக்கு சான்றிதழ் தராமல் 5 மணி நேரம் இழுத்தடிப்பு செய்தனர். இதனால் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் பெறுவதற்கு பசியுடன் காத்திருந்து தவித்தனர். உள்ளே கேண்டீன் வசதி செய்யாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் மாலை 5.30 மணியளவில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வாங்கினர். இது குறித்து சமூக ஆர்வலர் ஜோசப் கூறுகையில், ‘பல வயதானவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சான்றிதழ் வாங்க 5 மணி நேரம் தாமதமானதால் கடும் அவதி அடைந்தனர் அதற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

இசையை பொறுத்தவரை ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட இசையில்தான் சிறந்து விளங்குவார். ஒரு சிலரே அனைத்தையும் கற்று ஜாம்பவனாக விளங்குவர். அவர்களில் ஒருவர்தான் பிரபல வயலின் வித்வான் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன். இவர் வாசிக்கத் துவங்கினாலே அரங்கத்தில் அப்படி ஒரு அமைதி நிலவுமாம். தனி இசை வயலின் கச்சேரிகளிலும் தனி முத்திரை பதித்தவர். பொதுவாக, தனி வயலின் இசையை யாரும் ரசிக்க மாட்டார்கள். ஆனால், இவர், குன்னக்குடி வைத்யநாதன் உள்ளிட்டோர், இதில் தனி முத்திரை பதித்தவர்கள் எனக்கூறலாம். எம்எஸ்ஜி என அனைவராலும் அழைக்கப்படும் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை இரண்டிலும் சிறந்து விளங்கினார்.
்அவரைப்பற்றி தெரிந்து கொள்வோம்...

எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் 1931ம் ஆண்டு, ஜூன் 10ம் தேதி, பிரபல வயலின் இசைக்கலைஞரான பரூர் சுந்தரம் ஐயருக்கு மகனாக பிறந்தார். சென்னை மயிலாப்பூரில் பிறந்த இவர் இளம் வயதிலேயே வயலின் இசை மீது நாட்டம் கொண்டவராக இருந்தார். இதனால் தந்தையே இவருக்கு முதல் குருவாக திகழ்ந்தார். பள்ளிக்கூடம் செல்லும் 6 வயதில், இவர் வயலின் இசைப்பயிற்சியை தந்தையிடம் கற்க துவங்கினார். இவரது அண்ணனான எம்.எஸ்.அனந்தராமனும் தம்பியுடன் சேர்ந்து வயலின் இசையை கற்கத்தொடங்கினார். தினந்தோறும் அதிகாலை இவர்களது சங்கீத பயணம் துவங்கும். தந்தையிடம் இருவரும் கர்நாடக இசை, இந்துஸ்தானி இசையை கற்றுக்கொண்டனர்.

இவரது முதல் அரங்கேற்றம் ஆன வயது தெரியுமா? 8 வயதுதான்... நாம் கற்றது மட்டும் போதாது என எண்ணத்தொடங்கிய எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், பிரபல வித்வான்களின் கச்சேரிகளுக்கு செல்லத்துவங்கினார். வானொலி மூலம் இசையை கேட்டு அதையும் பல புதிய விஷயங்களை தெரிந்து கொள்வார். ஆரம்ப காலத்தில் பிரபல பாடகர்களுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், ஆலந்தூர் சகோதரர்கள், பல்லடம் சஞ்சீவ ராவ் என அந்தக் காலத்தின் முன்னணிப் பாடகர்கள் அனைவருக்கும் வயலின் வாசித்துள்ளார்.

லால்குடி ஜி.ஜெயராமன், டி.என்.கிருஷ்ணன் ஆகிய இசை மேதைகளின் சமகாலத்தவரான இவர், கர்னாடக இசை உலகில் தனக்கென்று தனி இடம் பிடித்தார். பாடுபவரின் மனநிலை, பாடலின் சூழல், பார்வையாளர்களின் மனநிலையை புரிந்து அதற்கேற்ற முறையில் வயலின் வாசிப்பதில் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் கைதேர்ந்தவர். இரண்டுவிதமான இசையையும் வெளிப்படுத்தி, இன்னிசை மழையில் நனைய வைத்தவர் எம்எஸ்ஜி. பக்க வாத்தியமாக மட்டுமின்றி, அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா என வெளிநாடுகளுக்கு சென்று, தனி வயலின் இசைக்கச்சேரிகளை நடத்தி உள்ளார். சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இவரது இசைப்பயணம் தொடர்ந்தது.

சிறந்த குரு - சிஷ்ய பரம்பரையை உருவாக்கியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. தந்தையிடம் எம்எஸ்ஜி வயலின் இசை கற்றுக் கொண்டதுபோல, இவரது மகளான நர்மதாவும் தந்தையிடம் வயலின் இசை கற்றுக் கொண்டார். பின்னர் சிறந்த வயலின் கலைஞராக பல்வேறு கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். மேலும், பத்மபூஷண், பத்ம, கலைமாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி, கேரள சங்கீத நாடக அகாடமி விருது, டி.சவுடையா விருது, வயலின் வாத்திய சாம்ராட், வயலின் வாத்தியச் சக்ரவர்த்தி, சப்தகிரி சங்கீத வித்வமணி உட்பட பல விருதுகளையும் எம்எஸ்ஜி  பெற்றுள்ளார். இரண்டுவிதமான இசையில் ஒரு சாதனையாளராக விளங்கிய எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஜன.3, 2013ம் ஆண்டு தனது 82வது வயதில் காலமானார். அவர் மறைந்தாலும், அவரது வயலின் இசை நம் காதுகளில் ரீங்காரமிட்டு கொண்டே இருக்கிறது.

Tags : certification grade delay ,
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்