×

பழநி, தொப்பம்பட்டியில் 91 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு

பழநி, ஜன. 3: பழநி மற்றும் தொப்பம்பட்டியில் 91 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஊரக உள்ளாட்சி தேர்தலில் பழநி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு 2ம் கட்டமா தேர்தல் நடந்தது. இதில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலப்பன்பட்டி, சிக்கமநாயக்கன்பட்டி, கரியாம்பட்டி ஆகிய ஊராட்சி மன்றத்தலைவர் பதவிகளுக்கு திமுகவைச் சேர்ந்த 3 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அதுபோல் பழநி ஊராட்சி ஒன்றியத்தில் 9 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களும், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 79 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தனர். எஞ்சிய பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மட்டுமே நேற்று நடந்தது.

Tags : Palani ,
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது