ஒட்டன்சத்திரம் அருகே தீ விபத்தில் ஆடுகள், கோழிகள் கருகின

ஒட்டன்சத்திரம், ஜன. 3: ஒட்டன்சத்திரம் அருகே கூத்தம் பூண்டிவலசு, கல்லாங்காட்டுவலசில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆடுகள் மற்றும் கோழிகள் தீயில் கருகின. கல்லாங்காட்டுவலசைச் சேர்ந்த முருகேசன் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த புஷ்பம் ஆகியோர் டிச.31ம் தேதி இரவு புத்தாண்டை முன்னிட்டு அருகில் இருந்த சர்ச்சுக்கு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக இரு வீடுகளும் தீப்பற்றியது. இதில் முருகேசனுக்குச் சொந்தமான ஆம்னிவேன் முற்றிலும் தீயில்

எரிந்தது. அருகில் கட்டப்பட்டிருந்த 3 ஆடுகள் மற்றும கோழிகளும் தீக்கிரையாகின. மேலும் வீட்டிற்குள் இருந்த பீரோ, கட்டில் உள்பட அனைத்தும் எரிந்து எலும்புக்கூடானது. தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் வீடுகள் எரிந்து சாம்பளாகின. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: