×

வாக்கு எண்ணும் மையத்தில் அடிப்படை வசதி இல்லை அலுவலர்கள் வெளி நடப்பு


திண்டுக்கல், ஜன. 3: வாக்கு எண்ணும் மையத்தில் அரசு ஊழியர்களுக்கு சாப்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் வாக்கு எண்ணுவதை விட்டு விட்டு வெளிநடப்பு செய்தனர். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிக்குட்பட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரியில் நேற்று காலை தொடங்கியது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து நேற்று மாலை திடீரென்று 4 மணியளவில் 200க்கும் மேற்பட்ட அலுவலலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அரசு ஊழியர்கள் கூறுகையில், ‘காலையில் 9 மணிக்கு இரண்டு இட்லி மட்டுமே வழங்கினர். இதையடுத்து டீ, பிஸ்கட் எதுவுமே வழங்க
வில்லை.

தொடர்ந்து மாலை 4 மணி வரை எங்களுக்கு மதிய உணவு வழங்கவில்லை. இதனால் ஒரு பெண் ஊழியர் மயக்கமடைந்தார். மேலும் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் ஒரே கழிப்பறையை பயன்படுத்தும் சூழ்நிலையும் உள்ளது. எங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் இல்லாத காரணத்தால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம்’ என்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனே சாப்பாடு வருவதற்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து வெளிநடப்பை கைவிட்டு சென்றனர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : facilities ,counting center ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...