×

அதிகாரிகள் தகவல் கரூர் ஒன்றியம் காதப்பாறை ஊராட்சி தலைவர் தேர்தல் முடிவு அறிவிப்பு தாமதத்தால் பரபரப்பு

கரூர், ஜன. 3: காதப்பாறை ஊராட்சி தலைவர் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குப்பட்ட காதப்பாறை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு கிருபாவதி, மல்லிகா ஆகிய இருவர் போட்டியிட்டனர். நேற்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இதில், கிருபாவதி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்க இருப்பதாக தகவல் கேள்விப்பட்ட எதிர்தரப்பு வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கை படி, மல்லிகாவுக்குத்தான் வெற்றி வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டது.இந்த வாக்குவாதம் காரணமாக, யார்? வெற்றி பெற்றார்கள் என்பதை அறிவிப்பு செய்ய தாமதம் செய்யப்பட்டதால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.செல்போனுடன் வந்தவர்கள் தடுத்து நிறுத்தம்தாந்தோணிமலை ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லு£ரியில் நேற்று காலை எண்ணப்பட்டன.

காலை 7 மணி முதலே வேட்பாளர்களும், முகவர்களும் என உள்ளே செல்ல ஆரம்பித்தனர். கல்லூரி நுழைவு வாயில் பகுதியில் இரண்டு கட்ட சோதனை நடத்தப்பட்டன. முதற்கட்ட சோதனையில் போலீசாரும், இரண்டாம் கட்ட சோதனையில் மெட்டல் டிடெக்டர் சோதனையும் நடத்தப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்திற்குள் பேனா, செல்போன் போன்ற எதையும் கொண்டு செல்லக்கூடாது என பல இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த விபரம் தெரியாத பல முகவர்கள், செல்போனுடன் உள்ளே செல்ல முயன்ற போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, செல்போனை யாரிடமாவது கொடுத்து விட்டு செல்லுங்கள் என கூறினர். இதனால், ஏராளமான முகவர்களும், சில வேட்பாளர்களும், போலீசாரிடம் செல்போனை ஏன்? எடுத்துச் செல்லக்கூடாது என கேள்விகள் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அரைமணி நேரம் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மாடி மாடியாக அலைந்து திரிந்த முகவர்கள்
வாக்கு எண்ணிக்கைக்காக மூன்று அடுக்கு பாதுகாப்புடன் இரண்டு தளங்களில் அறைகள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. அந்த தளங்களில் முகவர்கள் எந்த வழியாக செல்ல வேண்டும் என ஒரு சில இடங்களில் அறிவிப்பு நோட்டீஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் தங்களுக்கான இடம் எந்த பகுதியில் உள்ளது என்பது தெரியாமல் ஏராளமான முகவர்கள், மாடி மாடியாக அலைந்து, பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரிடம் கேட்டு தெரிந்து பின்னர் அறைகளுக்கு சென்றதால் வாக்கு எண்ணும் மையத்திலும் அரைமணி நேரத்துக்கும் மேல் பரபரப்பாக காணப்பட்டது.

Tags : panchayat leader panic ,Karur Union Kathparapura ,
× RELATED வங்கியாளர்கள் கண்காணிக்க வேண்டும்...