×

முடிவுகள் அறிவிப்பதில் கால தாமதம் மயங்கி விழுந்த ஆசிரியர்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் செந்தில். இவர் கீழ்வேளூர் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குஎண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று காலை வீட்டில் குளிக்க சென்ற போது அவரது தலையில் வீட்டின் மேல் கூறையில் போடப்பட்டிருந்த இரும்பு தகரம் குத்தியுள்ளது. அதை பெரிதுபடுத்தாமல் வாக்கு எண்ணிக்கை பணிக்கு வந்து வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டார். வாக்கு எண்ணிக்கையின்போது ஆசிரியர் செந்திலுக்கு தீடீர் என மயக்கம் ஏற்பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடன் அங்கு தயாராக இருந்த நடமாடும் மருத்துவ குழுவினர் சோதித்து பார்த்து தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக தான் மயக்கம் ஏற்பட்டதாக முதலுதவி அளித்து பின்னர் கீழ்வேளூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று அவருக்கு தலையில் ஏற்பட்ட காயத்திற்கு 5 தையல்கள் போடப்பட்டது. பின்னர் வாக்கும் எண்ணிக்கையில் ஈடுப்பட்டார்.

மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி
5 மணி நிலவரப்படி திமுக, அதிமுக 10 இடங்களில் வெற்றி
நாகை, ஜன.3: நாகை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 5 மணி நிலவரப்படி திமுக, அதிமுக தலா 10 இடங்களில் வெற்றிபெற்றது.5 மணி நிலவரப்படி மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலையில் இருந்தது.நாகை மாவட்டத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று 11 மையங்களில் எண்ணப்பட்டது. நாகை மாவட்டத்தில் உள்ள 21 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களில் திமுக 10 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும், அமமுக 1 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. அதே போல் 214 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 12 இடங்களிலும், அதிமுக 8 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது.மாலை 5 மணி நிலவரப்படி மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களில் அதிமுக 10 இடங்களிலும், திமுக 10 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதேபோல் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி இடங்களில் அதிமுக 22 இடங்களிலும், திமுக வேட்பாளர் 20 இடங்களிலும் வெற்றிபெற்றது.

Tags : editor ,delay ,
× RELATED அரசு பள்ளியில் ஆண்டு விழா