×

ழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்தில் 310 தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 5 மணிநேரம்

கீழ்வேளூர், ஜன.3: கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்தில் 310 தபால் ஓட்டுக்களை 5 மணிநேரமாக எண்ணியதால் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதமானது.நாகை மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 27ம் தேதி வாக்கு பதிவு முடிவு பெற்று நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்குகள் எண்ணிக்கை கீழ்வேளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் தபால் ஓட்டுகள் ஆர்.ஓ. அறையில் எண்ணப்பட்டது. 310 தபால் ஓட்டுகள் இருந்தது.இந்த தபால் ஓட்டுகள் எண்ண சுமார் 5 மணி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர் முடிவு அறிவிக்க காலதாமதம் ஆனது.இந்நிலையில் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டுக்கு மாலை 4 மணி அளவில் தி.மு.க.வை சேர்ந்த கருணாநிதி வெற்றி பெற்றதாக அறிவிகப்பட்ட உடன் அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் திடீர் என தேர்தலில் நடத்தும் அலுவலர் அறையை முற்றுகையிட்டனர். அப்போது காவல் துறையினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுகவினர்அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதனால் சுமார் அரை மணி நேரம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் மாலை 4.15 மணி அளவில் மீண்டும் ஒன்றியகுழு ஒன்றாவது வார்டு உறுப்பினராக தி.மு.க.வை சேர்ந்த கருணாநிதி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் அ.தி.மு.க.வினர் காவல்துறையிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர்.தபால் வாக்குகள் சுமார் 5 மணி நேரம் நடைபெற்று முடிவு பெற்றது. இதனால் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழ் பெற்றனர்.

Tags : Belur Panchayat Union ,
× RELATED குத்தாலம் காந்திநகர் பாலசுப்பிரமணிய...