×

அதிமுகவினர் மீது திமுக புகார் விளைநிலங்களை சேதப்படுத்திய பன்றிகளை பிடிக்கும் பணி

காரைக்கால், ஜன.3: விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த பன்றிகளை, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா உத்தரவின் பேரில், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் பிடிக்கப்பட்டது.காரைக்காலில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், திருநள்ளாறு பகுதியில் உள்ள விளைநிலங்களை அங்குஅதிக அளவு சுற்றித்திரியும் பன்றிகள் சேதப்படுத்தி வருவதாகவும், குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவு சுற்றித்திரிவதால் துர்நாற்றம் வீசுவதாகவும், அதனால், பன்றிகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். என விவசாயிகள் வலியுறுத்தியிருந்தனர்.தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜாவின் அறிவுறுத்தலின்பேரில், மாவட்ட துணை ஆட்சியர் ஆதர்ஷ், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையருக்கு, 6 நாள் அவசாகம் வழங்கி பன்றிகளை பிடிக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரவி மேற்பார்வையில், வெளியூரிலிருந்து பன்றி வளர்ப்புப் பணியில் ஈடுபட்டிருப்போரை வரவழைத்து, திருநள்ளாறு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகள் பிடிக்கும் பணி தொடங்கியது. இப்பணி குறித்து, ஆணையர் ரவி கூறியது: திருநள்ளாறு பகுதியில் முதல் கட்டமாக, 22- பன்றிகள் பிடிக்கபப்டுள்ளது. தொடர்ந்து, இப்பணி நடைபெற்று வருகிறது. பன்றி பிடிக்க கூலியாக, பிடிக்கப்படும் பன்றிகளை அவர்களே கொண்டுசெல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றார்.முறைகேடு நடந்ததாக கூறி திமுகவினர் சாலைமறியல்இரவு 9 மணி நிலவரம்

Tags : DMK ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு