×

மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியத்தை திமுக கூட்டணி கைப்பற்றியது

அருப்புக்கோட்டை, ஜன. 3: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த டிச.27 மற்றும் 30ம் தேதிகளில் 2 கட்டமாக நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 15 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 31 ஊராட்சி தலைவர் பதவிக்கும் 2 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கும், 155 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடந்தது. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஆண் வாக்காளர்கள் 38 ஆயிரத்தி 793 பேரும், 41 ஆயிரத்தி 221 பெண் வாக்காளர்களும், இதரர் 7 பேர் சேர்த்து 80 ஆயிரத்தி 21 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 154 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆண் வாக்காளர்கள் 28 ஆயிரத்தி 174 பேரும், பெண் வாக்காளர்கள் 31 ஆயிரத்தி 703 பேரும் இதரர் 2 பேரும் மொத்தம் 59 ஆயிரத்தி 885 பேரும் வாக்களித்தனர்.  இதற்கான வாக்கு எண்ணிக்கை அருப்புக்கோட்டை எஸ்பிகே ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. 15 ஒன்றியக் கவுன்சிலரில் 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் மகாலட்சுமி 1,484 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்,

2வது வார்டில் திமுக வேட்பாளர் பசுபதி 1172 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், 3வது வார்டில் திமுக வேட்பாளர் கலையரசி 2169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், 4வது வார்டில் திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி 2602 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், 5வது வார்டில் திமுக வேட்பாளர் சசிகலா 1979 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், 6வது வார்டில் திமுக வேட்பாளர் கோவிந்தசாமிநாதன் 1660 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், 7வது வார்டில் நாகராணி (திமுக)-2047 ஓட்டுகளும், 8வது வார்டில் சுப்புலட்சுமி (திமுக) 2684 ஓட்டுகளும், 9வது வார்டில் (மதிமுக) ராதாகிருஷ்ணன் 1527 ஓட்டுகளும் பெற்று வெற்றி பெற்றனர்.  31 ஊராட்சி மன்ற தலைவரில் வில்லிபத்திரி, சூலக்கரை, குல்லூர்சந்தை, பெரியவள்ளிக்குளம், பாலவநத்தம், கோபாலபுரம், பாலையம்பட்டி, இராமானுஜபுரம், கோவிலாங்குளம், கட்டங்குடி, கஞ்சநாயக்கன்பட்டி 11 ஊராட்சி மன்றத்திற்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியாளர்கள் தபால் ஓட்டு போடவில்லை:
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் பணிக்கு 950 அரசு  அலுவலர்கள், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் 276 பேருக்கு மட்டும்  தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.  மற்றவர்களுக்கு தபால் ஓட்டு  வழங்கப்படாததால் தேர்தல் பணிக்கு சென்றவர்கள் தபால் ஓட்டுக்கள் போடவில்லை. குறித்த நேரத்தில் உணவு இல்லை: வாக்கு  எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்களுக்கு காலை, மதியம் குறித்த நேரத்தில் உணவு வழங்கப்படவில்லை.  இதனால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மதிய நேரத்தில் உணவு வழங்காததால்  வெளியில் சாப்பிட்டு வருகிறோம் என்று சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே  டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.

Tags : district ,DMK Alliance ,Aruppukkottai Union ,
× RELATED திமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு