×

கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவர், துணைதலைவர் இடங்களை திமுக பிடித்தது

கீழ்வேளூர், ஜன.3: கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 12 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கான இடங்களில் அறிவிக்கப்பட்ட 8 இடங்களில் திமுக 7 இடங்களில் வெற்றிபெற்று பிடித்து ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் இடத்தை பிடித்துள்ளது.நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 16 வது வார்டு ஒரு பதவிக்கும், 38 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 261 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கும் வாக்கு பதிவு கடந்த 27ம் தேதி நடைபெற்றது. கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 5 பேரும், 12 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 53 பேரும், 38 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 140 பேரும், 261 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 734 பேர் என 932 பேர் போட்டியிட்டனர்.

கீழ்வேளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.அதன் படி கீழ்வேளூர் ஒன்றிய குழு 1 வது வார்டில் கருணாநிதி (தி.மு.க.) வெற்றிப் பெற்றார். 2 வது வார்டில் வாசுகிநாகராஜன் (தி.மு.க.) வெற்றி பெற்றார், 3 வது வார்டில் (அ.தி.மு.க.) வெற்றிப் பெற்றார். 4 வது வார்டில் ஹபீபுகனி (தி.மு.க.), வெற்றிப் பெற்றார். 5 வது வார்டில் இன்முனிசா (தி.மு.க.) வெற்றிப் பெற்றார். 6 வது வார்டில் புருஷோத்தமதாஸ் (தி.மு.க.), வெற்றிப் பெற்றார். 7 வார்டில் கண்ணன் (தி.மு.க( வெற்றிப் பெற்றார். மாவட்ட ஊராட்சி 16 வது வார்டிற்கு செல்விவீரமணி (தி.மு.க.) தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். மொத்தமுள்ள 12 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 8 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 7 இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதால் கீழ்வேளூர் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஒன்றியக்குழு துணைத் தலைவர் இடங்களை திமுக பிடித்தது.

Tags : DMK ,union committee chairman ,Keezhveloor Panchayat Union ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்