×

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் நள்ளிரவு வரை நடந்த வாக்கு எண்ணிக்கை

தரங்கம்பாடி, ஜன.3: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. நள்ளிரவிற்கு பின் முடிவுகள் வெளிவரும் எதிர்பார்க்கப்படுகிறது.நாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் 3 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வார்டுகளுக்கு 20 பேரும், 30 ஒன்றியகுழு உறுப்பினர் வார்டுகளுக்கு 124 பேரும், 57 ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பிற்கு 235 பேரும், 456 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 1,461 பேரும் போட்டியிட்டனர். இவர்களுக்கு வாக்களிக்க 114 இடங்களில் 269 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவிற்கு பின் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு செம்பனார்கோவிலில் உள்ள கலைமகள் கல்லூரியில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. 60 மேஜைகளில் வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு அதிலிருந்த 4 வகையான வாக்குச் சீட்டுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பின் ஊராட்சி வார்டுகள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றியகுழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஆகியோருக்கான வாக்குச் சீட்டுகள் தனித்தனி இடத்தில் வைத்து வேட்பாளர் முகவர்களின் முன்னிலையில் எண்ணும் பணி நடைபெற்றது.  வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்க நள்ளிரவிற்கு மேலாகும் என்று கூறப்படுகிறது.

Tags : Panchayat Union ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...