×

திருமருகல் வாக்கு எண்ணும் மையத்தில்

நாகை, ஜன.3: நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குகள் எண்ணும் பணிதிருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. நேற்று இரவு திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடகரை ஊராட்சிக்குட்பட்ட 2 வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்ட அறையிலிருந்து எடுத்து வரும்போது காணவில்லை. இதனால் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் குழப்பமடைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரைமணிநேரம் தேடுதலுக்குப்பிறகு வாக்கு எண்ணிக்ககை நடைபெற்ற இடத்தில் மாற்று அறையில் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் அந்த வாக்குப்பெட்டியை சம்மந்தப்பட்ட அறைக்கு எடுத்து வந்து எண்ணத்தொடங்கினர்.

2 வாக்குபெட்டிகள் மாயமானதால் பரபரப்பு போலீஸ் பாதுகாப்பு ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திற்கும் ஒரு ஏடிஎஸ்பி அல்லது ஒரு டிஎஸ்பி தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள் 3 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 2 வெடிகுண்டு நிபுணர்கள் என ஒரு மையத்துக்கு 200 முதல் 250 போலீசார் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வருபவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு சுற்றுக்கும் அனுமதிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் அடையாள அட்டை இல்லாதவர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. 11 மையங்களிலும் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Thirumurugal Voting Counting Center ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...