×

தேனியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது

தேனி, ஜன.3: தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எட்டு இடங்களில் நடந்தது. இதில் முடிவு அறிவிக்கப்பட்ட இடங்களில் திமுக 19 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களையும் பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 16 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிச.27 மற்றும் டிச.30ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. ஆண்டிபட்டி, க.மயிலாடும்பாறை ஒன்றியங்களில் முதல் கட்டமாகவும், பெரியகுளம், தேனி, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஒன்றியங்களில் இரண்டாம் கட்டமாகவும் நடந்தது.

தேனி மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் 10 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 98 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்’ 130 ஊராட்சித் தலைவர்கள் , 1161 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களுக்கு நடந்த தேர்தலையடுத்து வாக்கு எண்ணிக்கை நேற்று அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை முதல் தொடங்கி இரவிலும் வாக்கு எண்ணிக்கை நீடித்தது. தேனி ஊராட்சி ஒன்றியம் தேனி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 12 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 16 ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி மன்றங்களின் வார்டு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிநிலைப் பள்ளியில் நடந்தது. வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. ஒரு வாக்குப்பெட்டியில் நான்கு பதவிகளுக்கான வாக்குச் சீட்டுக்கள் இருந்ததால் முதலில் வாக்குச் சீட்டுக்களை வகைப்படுத்தி அதனை பிரித்து தனித்தனியாக கட்டு போடும் பணி நடந்தது. இது 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் வாக்கு எண்ணும் பணி காலை 10 மணிக்கு மேல் தான் தொடங்கியது. நேற்று மாலை 4.30 மணி வரை ஊஞ்சாம்பட்டி, அரண்மனைப் புதூர் ஊராட்சிகளுக்கான வாக்குகள் மட்டுமே எண்ணி முடித்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஒன்றிய கவுன்சிலர் பதவி 1வது வார்டு பிரகாஷ் (அதிமுக) - 2,323 சக்திவேல் (திமுக) - 1342
அதிமுக வெற்றி .
2வது வார்டு
முருகன் (காங்) - 1769
சித்திரவடிவேல் - (அதிமுக) - 1125
காங். வெற்றி.
3வது வார்டு
கந்தவேல்
(திமுக) - 1247
பாண்டியன்
(பாஜ) -829
திமுக வெற்றி
4வது வார்டு
நாகலட்சுமி
(திமுக) - 2251
விஜயராணி (அதிமுக) 1978
திமுக வெற்றி
இரவு 7 மணி வரை நிலவரப்படி தேனி மாவட்டத்தில் உள்ள 98 ஊராட்சி ஒன்றிய கவுன்சில் பதவிக்கு 41 இடங்களுக்கு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் 19 இடங்களில் திமுகவும், 2 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. 16 இடங்களில் அதிமுகவும், 1 இடத்தில் தேமுதிக, 3 இடத்தில் அமமுக வெற்றி பெற்றுள்ளன.
தேனியில் உள்ள 10 மாவட்ட கவுன்சில் பதவிக்கான இடங்களில் 7 இடங்களில் அதிமுகவும், 3 இடங்களில் திமுகவும் முன்னிலை பெற்றுள்ளன.

Tags : Theni ,coalition ,DMK ,Rural Local Government ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...